Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணாவின் கருத்துக்கு பொன்சேகா பதிலடி



விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த கருணா இராணுவத்திடம் சரணடைந்த போது அவருடன் 150 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் சரணடைந்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 80 பேர் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருக்கவில்லை என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.

18 வயதுக்குட்பட்ட எவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ள கூடாது என தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவுறுத்தி இருந்தாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியிருந்தார்.

இவ்வாறு கருணா தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments