Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொள்கையில் மாற்றமில்லை: வட கொரியாவில் இருந்து ட்ரம்புக்கு பறந்த தகவல்!



மோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க - வட கொரிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை நீடித்து வரும் நிலையில் அமெரிக்க குழுவொன்று தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளது.

குறித்த பிரதிநிதிகள் முன்னிலையில் கருத்து தெரிவித்துள்ள வட கொரிய இராஜாங்க உத்தியோகத்தர் ஒருவர், இரு நாட்டு முறுகல் நிலை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பேச்சுவார்த்தையானது வொஷிங்டனுக்கான அரசியல் இலாபமே தவிர வேறு எதனையும் ஈட்டித்தராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வட கொரியாவின் வெளிவிவகார பிரதியமைச்சர் ச்சோ சொன் ஹூய்,

இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை பலனளிக்கப் போவதில்லை எனவும், வட கொரியாவின் கொள்கை திட்டங்களில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வட கொரியா – அமெரிக்காவின் ஸ்தம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஆராய அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ஸ்டீபன் பீகன் அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்,

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராய வேண்டும்.

அதன் மூலமே ஸ்தம்பித்துள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தைகள் மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments