Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!



ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்டன.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று சமூகத் தொற்றாக பரவுவது குறைந்துள்ள காரணத்தால் பாடசாலைகள் மீளவும் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், பாடசாலைகளை நான்கு கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு மேலும் தெரவித்திருப்பதாவது,

ஜூன் 29 முதல் ஜூலை 03 வரை ஆசிரியர், அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் ஜூலை 06 ஆம் திகதி தரம் 05, 11, 13 மாணவர்களுக்கும் ஜூலை 20 ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களுக்கும், ஜூலை 27 ஆம் திகதி தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரமபமாகும் எனவும் முன்னர் அறிவிக்கப்படிருந்தது.

இருப்பினும் முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கல்வி அமைச்சு நேற்யை தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments