Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் வெளியான தகவல்!



பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளின் வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த குற்றவியல் விசாரணை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதிகாரிகள் சிலர் கைப்பற்றிய போதைப் பொருள் தொகை, போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், பொலிஸ் திணைக்களத்திற்குள் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை காரணமாகவும் அதனை தீர்க்கும் நோக்கிலும் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

அதேவேளை ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பான கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு மேலதிக மேலும் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் 16 பொலிஸ் அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள், சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது கைப்பற்றப்படும் ஹெரோயின் உட்பட போதைப் பொருட்களை மீண்டும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments