Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!



கிராமங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அறிந்து வங்கிச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

வெளிநாடுகளில் இருந்து வந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவை ஆகும்.

தொழிற்சாலைகள் உருவாகுவது மாத்திரம் அபிவிருத்தி அல்ல. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமிய தொழிற்துறையும் வளர்ச்சியடைய வேண்டும்.

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு தொழிற்துறைகளை முன்னேற்றி பொருளாதார அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம்.

இதற்காக பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்யும் விதத்தை கீழ் மட்டத்தில் இருந்து ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானது.

வணிக வங்கிகள் கடனை வழங்கும் போது உற்பத்தி துறையை விட சந்தைப்படுத்தல் குறித்து கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

சம்பிரதாயங்களுக்குள் வரையறுக்காமல் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் பொறுப்பாகும்.

விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்ய இடமளிக்காது, உழுந்து, குரக்கன், பாசிப்பயறு உட்பட தானிய பயிர் செய்கைகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.

அந்தந்த பிரதேசங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்து விவசாயிகளை ஊக்குவிக்க தேவையான உதவிகள் மற்றும் வங்கிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டப்ள்யூ.டி. லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மகிந்த சாலிய, பொது முகாமையாளர் ரி.குகன் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments