பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என கூறி வந்தவர்கள். தற்போது அந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
அதாவது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், எம்.சி.சி உடன்படிக்கை நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே அதனை தீயிட்டு கொளுத்த வேண்டுமென முழக்கம் இட்டனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள்தான், குறித்த எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments