ஸ்ரீலங்காவில் உள்ள வனப்பகுதிகளில் 5 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பை 5 பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக 2001/5 இலக்க சுற்றறிக்கையில் திருத்தங்களை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பாஹிங்கல ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
5 லட்சம் ஹெக்டேயர் என்பது ஸ்ரீலங்கா காடுகளில் 4 வீதம் எனவும் சுற்றுச் சூழலை அழிக்கும் இந்த திட்டத்தின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ இருப்பதாகவும் தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை அறிக்கையில் ஸ்ரீலங்காவின் வனப்பரப்பை 30 வீதமாக அதிகரிக்க போவதாக வாக்குறுதி வழங்கி இருந்தார்.
எனினும் தற்போதைய நடவடிக்கையானது அவரது வாக்குறுதிக்கு எதிரான செயலாக இருப்பதாக பாஹியங்கல ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments