வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசோக பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாமை தனது தந்தைக்கு தெரியாது என யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சிக்குள் நடக்கும் பல விடயங்கள் தனது தந்தைக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச சார்பில் குருணாகல் மாவட்டத்தில் நடைபெற்ற சில கூட்டங்களில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துரைக்கும் போது,
பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிய தான் வந்துள்ளதாகவும் யோஷித ராஜபக்ச கூறியுள்ளார். அப்போது அசோக பிரேமதாசவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது அநீதியானது தானே என அங்கிருந்த சிலர் யோஷிதவிடம் வினவினர்.
அதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பசில் ராஜபக்ச வாக்குறுதியளித்திருந்தாக அசோக பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவே தலைமை வேட்பாளர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்கு நெருக்கமான பலரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 Comments