மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்காவிற்குள் நுழைந்த விமானம் ஒன்றை விமானப்படை துரத்திய போது வீதி ஒன்றின் நடுவில் விழுந்து கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
குறித்த இடத்தை இராணுவம் சோதனை செய்த போது சற்று தொலைவில் ஒரு ட்ரக்கில் 13 சாக்கு மூட்டைகளில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர்.
850 பவுண்டுகள் எடையுடைய அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4.9 மில்லியன் டொலர்கள் ஆகும்.
போதைப்பொருள் கடத்தும் கும்பல் ஒன்று இராணுவம் தங்களை துரத்துவதைக் கண்டதும் தப்புவதற்காக போதைப்பொருள் இருக்கும் விமானத்தை கொளுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அந்த செய்தியை உறுதிசெய்யவில்லை.
விமானம் தரையிறங்கும்போது மோதி வெடித்து தீப்பிடித்ததா, அல்லது கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே அதை தீவைத்து கொளுத்தினார்களா என்பதும் தெரியவில்லை.
0 Comments