Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் இன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை



ஸ்ரீலங்காவில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஸ்ரீலங்காவில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789 டொலராக காணப்படுகின்றது.

அதன்படி கடந்த ஜூன் 18 ஆம் திகதியிலிருந்து இன்று வரை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1,722 டொலரில் இருந்து ஆயிரத்து 789 டொலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.

Post a Comment

0 Comments