Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ஷ அரசு முழு உலக இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.



கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் சமய முறைப்படி அடக்கம் செய்ய இடமளிக்காத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் எப்படித்தான் வாக்களிக்க முடியும் என குமார வெல்கம கேள்வியெழுப்பியுள்ளார்.

பேருவளை மரக்கலாவத்த சாரா மண்டபத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுடனான விஷேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம் எவ்வாறான தொற்றும் ஏற்படாது என்பதை நன்கு அறிந்தும் கூட முஸ்லிம்களின் சடலங்களை எரித்ததன் மூலம் ராஜபக்ஷ அரசு முழு உலக இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.

அது மட்டுமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களின் சாபத்தையும் பெற்றுக்கொண்டது.

முஸ்லிம் மத தலைவர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் எதிர்த்தும் கூட, விசேடமாக அலிஸப்ரி, பைஸர் முஸ்தபா போன்றோர் கூட கடுமையாக எதிர்த்தும் முஸ்லிம் உடல்களை தீ வைத்து எரித்தார்கள்.

உலகத்தில் எந்த ஒரு நாடும் பின்பற்றாத ஒரு செயலை இந்த நாட்டில் செய்வதன் நோக்கம் என்ன என கேட்கின்றேன்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இனவாதத்தை பயன்படுத்துவது கவலைக்குரியதாகும். இனவாதம் பயங்கரவாதத்தை விட மிக மோசமானதாகும் என்றார்.

Post a Comment

0 Comments