Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக வெடித்துள்ள தொடர் சர்ச்சைகள்!



உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் காட்டிக்கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் பிரசார செயலர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டு தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய விளையாட்டு குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு, போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டமைக்கான போதுமான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விசாரணைகளை நிறைவு செய்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்படியானால், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டும் என்றே பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு காரணமாக நாட்டுக்கு பெரிய புகழை தேடிக்கொடுத்த விளையாட்டு வீரர்களின் நற்பெயருக்கு பாதிப்பு மாத்திரமே ஏற்பட்டுள்ளது.

ஏதோ ஒரு வகையில் அந்த போட்டி காட்டிக் கொடுக்கப்பட்டிருக்குமாயின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இதனால், இந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. பல ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments