Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்! புலனாய்வுத்துறை அதிகாரி ஆபத்தான நிலையில்












ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் ஸ்டெடன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் புலனாய்வு துறை உத்தியோகத்தர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.30மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹட்டனில் இருந்து செனன் பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிலும் செனன் பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியினை நோக்கி பயணித்த ஜீப் வண்டி இரண்டும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ஜீப் வண்டியின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜீப் வண்டியின் அதிகவேகம் மற்றும் சாரதியின் கவயீனமே இந்த விபத்திற்கு காரணம் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியினை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.


Post a Comment

0 Comments