கடந்த மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 வரையான மின் அலகுகள் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,
கடந்த மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 வரையான மின் அலகுகள் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணங்களை செலுத்துவதற்காக மூன்று மாத சலுகை காலம் வழங்கப்பட உள்ளது.
மேற் குறிப்பிடப்பட்ட மாதங்களில் கட்டணம் அதிகரித்துள்ளதால் அதனை செலுத்துவதில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த குழுவினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments