Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!



ஹோமாகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது ஹோமாகம, பிட்டிபன சில்வர்ஸ்டர்வத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வீட்டின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 கைக்குண்டுகள், துப்பாக்கி, அதற்கான 4 ரவைகள், குண்டு துளைக்காத கவசங்கள் இரண்டு மற்றும் 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சார்ந்த 77 ரவைகள் மற்றும் இனங்காணப்படாத 4 ரவைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த வீடானது அண்மையில் 12 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமாகம, பிட்டின பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரது காதலிக்கு உரித்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments