Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

குவைத்தில் அவலப்படும் இந்தியர்கள்! நிர்க்கதியாகிய எட்டு இலட்சம் தொழிலாளர்கள்



குவைத்தில் வாழும் இந்தியர்களில் 08 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பு காரணமாக தங்கள் நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்து இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அந்நாட்டு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

குவைத்தில் மொத்தமாக 43 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 30 இலட்சம் பேர் வெளிநாட்டினர். குவைத்தில் சுமார் 14.5 இலட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் எட்டு இலட்சம் இந்தியர்கள் இப்போது குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக குவைத்தில் உள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதென அண்மையில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments