கொழும்பிலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரில் 50 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதன்படி குறித்த 50 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த 50 பேரும் மேலும் இருவாரங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பீ சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 50 பேரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் 10 பேர் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 154 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments