Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்க புதிய அமைப்பு!



சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தும் பணிக்கு இடையூறாக அமையும் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியினுள் கட்சி அல்லது சுயேட்சைக்குழு அல்லது வேட்பாளர் ஊக்கப்படுத்தலுக்கு அன்றேல் பாதிப்புக்குக் காரணமாக அமையக்கூடிய சம்பவங்கள் தொடர்பில் இந்த மத்திய நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கீழ்காணும் தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக் முடியும்.

011 – 288 62 79 , 011 288 64 21, 011 288 61 17 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மேலும் 071 – 9160000 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு வட்ஸ்ஆப் அல்லது வைபர் ஊடாக பொதுமக்களின் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments