பலுகமுவ-கல்கிஸ்ஸ பகுதியில் மது அருந்தி விட்டு வாய்க்கால் ஒன்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த நபர் உடுபத்தாவ பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய நிமந்த மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நண்பர்கள் மூவருடன் நீராடுவதற்காக வந்துள்ள இவர்கள் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் ஏற்கனவே 13 பேர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments