Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தூக்கு மேடைக்கு போகவேண்டியவர்கள் தேடும் அமைச்சு கதிரைகள்!



தூக்கு மேடை போகவேண்டியவர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சுக் கதிரை தேடுகின்றனர் என தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் , ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை வேட்பாளருமான மொஹைதீன் முஸம்மில் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் நேற்றைய தினம் மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மீண்டும் திட்டமிட்ட இரகசிய கொலைகள் ஆரம்பித்த கட்டத்தில் எதிர்கொள்ளும் 2020 பொது தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக அமையுமா? என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகின்றது. இதே சமயம் முஸ்லிம்கள் மீது சீண்டி விடும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கவலையை தரும் விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று தான் 3000 இலங்கை படையினரை ஒரே தடவையில் படுகொலை செய்ததாக ஏற்றுக்கொள்ளும் கருணா ஜனநாயகம் பேசும் ஜனநாயக வாதியாகவும், ஜனநாயகத்தை கடைப்பிடித்து ஜனநாயக ரீதியில் தமது சிறுபான்மை உரிமைகளை வென்றெடுக்க போராடிய முஸ்லிம் தலைவர்கள் கொலை குற்ற விசாரணைகளுக்கு ஏற்றி இறக்கப்படுவதும் மிகவும் மன வேதனைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் தான், தாம்மேற்கொண்ட அராஜகங்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளை செய்து விட்டு, தாம் அதனை செய்யவில்லை மற்றவர்கள் தான் செய்தார்கள் போன்ற எண்ணற்ற பொய்களை சொல்லி மக்களை மடையர்களாக்க நினைக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் இனி ஒரு போதும் மேற்கொள்ள இயலாது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments