3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்று குவித்ததாக தெரிவித்த‘கருணா’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை பி.கலஹெபத்திரண என்றஆசிரியர் தாக்கல் செய்துள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்வதற்கான உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பிக்குமாறு கோரியே, இம்மனுவை இன்று அவர் (25) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அத்தோடு, அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சட்ட மா அதிபர், கருணா , பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக விடுதலைப் புலிகளின் தலைவரும் கேணலுமாக இருந்த கருணா , தான் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டுள்ளதாக கருதப்படுவதாக, தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் இவ்வாறான குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments