சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தை திறக்கும் நடவடிக்கை தாமதமாகலாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் விமானநிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி அல்லது அதற்கு பின்னர் விமானநிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலா துறையை பாதுகாப்பதற்கெனவும் சுற்றுலா பயணிகளின் ஊடாக நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கும் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
0 Comments