முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் பெண்தலைமைத்தவ குடும்பத்தின் வீட்டினை அரச உத்தியோகத்தர்கள் இருவர் அபகரித்து வாழ்ந்து வருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குறித்த வீட்டு உரிமையாளரான பெண் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம், 05 ஆண்டுகளுக்கு மேலாக அரச உத்தியோகத்தில் பணிபுரியும் கணவன் மனைவி ஆகிய இருவரும் தனது வீட்டில் அனுமதி இன்றி வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கைவேலியில் நிரந்தர வீடு உள்ள போதும் ஆண்கள் உதவி இல்லாத காரணத்தினால் எங்கள் வீட்டினை அபகரித்து வசித்து வருகின்றார்கள்.
தனக்குரிய வீட்டுக் காணியில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வீட்டில் வாழ நடவடிக்கை எடுத்து தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments