கொரோனா தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வேகம் எடுத்துள்ள நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் பொது வெளியில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் முகக்கவசம் அணிவித்துச் சென்றுள்ளனர்.
0 Comments