Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையில் கிட்டிய தீர்க்கமான முடிவு!



இந்திய - சீன எல்லையிலுள்ள இரு நாட்டு இராணுவத்தினரும் தங்கள் படைகளை விலக்கி கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் திகதி இந்திய - சீன இராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் 76 வீரர்கள் காயமடைந்தனர்.

சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் சீனா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இரு நாடுகள் இடையேயும் மோதல் போக்கு தொடர்ந்ததால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு தரப்புகளும் முடிவெடுத்த நிலையில் இந்திய மற்றும் சீன இராணுவத் தரப்புகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடத்தின.

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையானது கட்டுக்கோப்பான மற்றும் நேர்மறையான ரீதியில் நடைபெற்றதாகவும் இரு தரப்புகளும் பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வதென இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments