Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரையும் விட்டுவைக்காத கொரோனா



உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலீனா இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செர்பிய தலைநகரில் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க சென்ற உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் குடும்பத்திற்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எந்தவிதமான கொரோனோ அறிகுறியும் இல்லாத நிலையில் ஜோகோவிச்சுக்கும் அவரது மனைவிக்கும் பொசிட்டிவ் எனவும் மகனுக்கு நெகட்டிவ் எனவும் முடிவு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் தனிமையில் இருந்துவிட்டு மீண்டும் கொரோனோ சோதனை செய்யவுள்ளதாகவும் ஜோகோவிச் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க வந்த மூன்று டென்னிஸ் வீரர்களுக்கு ஏற்கனவே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோகோவிச்சுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டென்னிஸ் உலகம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Post a Comment

0 Comments