கனடாவில் காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் சசிகுமாரிஅமரசிங்கம் என்ற 47 வயதான இலங்கை தமிழ்ப்பெண் காணாமற் போயிருந்தார்.
கடைசியாக அவர் Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டதாக ரொறன்ரோ பொலிசார் தகவல் வெளியிட்டனர்.
அத்துடன் அவர் காணாமல் போனவேளை அணிந்திருந்த உடைகளின் விபரம் மற்றும் அவரின் உயரம் குறித்த தகவலையும் பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காணாமல் போன சசிகுமாரி அமரசிங்கத்தை கண்டுபிடித்துவிட்டோம்.
அவரை கண்டுபிடிக்க நாங்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவை அதிகளவில் பகிர்ந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.
0 Comments