Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

தனது முடிவை திட்டவட்டமாக தெரிவித்தது கோட்டாபய அரசாங்கம்



எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சலஞ் கோப்பரேசன் உடன்படிக்கை எக்காரணம் கொண்டும் அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படமாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது கோட்டாபய அரசு.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசியல் அமைப்பிற்கும் பிரதான சட்டங்களுக்கும் முரணான எந்தவொரு உடன்படிக்கையும் எந்தவொரு நாட்டுடனும் செய்துகொள்ள அரசாங்கம் தயாரில்லை.

எம்.சி.சி உடன்படிக்கையை வரிக்கு வரி சிங்களத்தில் மாற்றி புத்தகமாக வெளியிட்டவன் நானே. அதுமட்டும் அல்ல ஐ.தே.க. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளதாக இருந்தது. அப்போதும் நாம் அதனை தடுத்தோம்.

அரச நிறுவனங்களில், அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாது செயற்பட்ட வேளையில் அரசியல் அமைப்பையும், பிரதான சட்டங்களை மீறியும் இவ்வாறான உடன்படிக்கையை செய்ய அனுமதிக்க முடியாது.

இது குறித்த இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் அரசியல் அமைப்பின் சில விடயங்களுடன் முரணாக இருந்தது, அத்துடன் பிரதான சட்டங்களுடனும் முரண்பட்டது.

ஆகவே எமது அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு நாட்டுடனோ, எந்த வல்லரசுகளுடனுமோ இலங்கையின் அரசியல் அமைப்பினையும் நாட்டின் அடிப்படை சட்டங்களுடன் முரண்படும் எந்தவொரு உடன்படிக்கையையும் செய்துகொள்வதில்லை என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த உடன்படிக்கைக்கு எதிராக காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments