Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

யாழில் கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்





யாழ் நகரப் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாலி வீதி - பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் மினி பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த அருளப்பு சிறிசோலாகு என்ற 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடம் என்பவற்றில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குடும்பத்தலைவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

இதனையடுத்து மினி வானுடன் சாரதியை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments