Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

திடீரென கள விஜயமொன்றை மேற்கொண்டார் பிரதமர் மஹிந்த















கொலன்னாவை - கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தை பிரதமர் மஹிந்தராஜபக்ஸ இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றிணைந்து கொழும்புப் பகுதியில் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாக கொலன்னாவை கால்வாயினை அபிவிருத்தி செய்யும் திட்டத்திம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் அத்திட்டம் செயற்படுத்தப்படும் கொலன்னாவையைச் சூழவுள்ள பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது பிரதம அமைச்சர் அவர்கள் நாகலகம் வீதியில் நிர்மாணிக்கப்படும் நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டதுடன் அதன் பின்பு நீரேற்று நிலையத்தின் நிர்மாணப் பணிகள்

தொடர்பாக அந்தக் கருத்திட்டத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் ஏ.எச். துஷாரி கருத்திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.

இந்த திட்டத்தின் இன்னொரு கட்டமாக செயற்படுத்தப்படும் கொலன்னாவை கால்வாய் களனி கங்கையுடன் இணையும் இடமான கறுப்பு பாலம் அருகில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டார்.

அதன் பின்பு வெல்லம்பிட்டி பாலம், துப்பாவில கால்வாய், செலலிஹினி மாவத்தை அருகிலுள்ள கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது செலலிஹினி மாவத்தை அருகிலுள்ள கால்வாயினைப் பார்வையிட்ட பிரதமர் அவர்கள், கால்வாயின் இரண்டு பக்கங்களையும் அபிவிருத்தி செய்து மக்களுக்கு நடமாடும் நடைபாதையொன்றை அமைக்குமாறும், அப்பிரதேசத்தில் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணிகளில் மரங்களை நடுமாறும், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை அப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

Post a Comment

0 Comments