Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தயார்!



இலங்கை அணி 2011ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியின் போது வெற்றிவாய்ப்பை விற்பனை செய்துவிட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டினை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடு செய்யும்படியும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பை இலங்கை அணி விற்பனை செய்து ஆட்டநிர்யணயத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தாம் தயார் எனவும் அவர் கூறியிருந்தார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் இந்தக் கருத்தக்கு பதிலடி கொடுத்து டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, தேர்தல் பிரசாரம் நெருங்கியுள்ளதால் இப்படியான போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு குறித்து பக்கச்சார்பான விசாரணையொன்றை நடத்த உத்தரவிடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் டுவிட்டர் பக்கத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதனை ஐ.சி.சியிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

0 Comments