Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முதன்முறையாக ஓர் உயரிய சபையின் ஒன்றுகூடலுக்கு தலைமை வகித்த தமிழ் பெண் உத்தியோகஸ்தர்



இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக ஹரின் பெர்னாண்டோவும்,பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸூம் ஏகமனதாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

‌இதன்போது முதன்முறையாக ஓர் உயரிய சபையான செயற்குழு ஒன்றுகூடலுக்கு பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் தலைமை வகித்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆலோசனையின் பெயரிலும் பதுளை பிரதேச சபை உறுப்பினரும் தோட்டத்தொழிலாளியுமான தேன்மொழியின் தலைமையிலே இச்செயற்குழு ஒன்றுகூடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ‌

‌சங்கத்தின் யாப்பின் படி எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானங்களுக்கும் செயற்குழுவின் 1/3 பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகையும் தீர்மானங்களும் தேவை.

அந்த வகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் செயற்குழு கூட்டத்தில் 1/3 பெரும்பான்மைக்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்குழுவின் தீர்மானத்தின் பெயரிலேயே சங்கத்தின் தலைவராக ஹரின் பெர்னாண்டோவும், பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸூம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

‌சங்கத்தின் தலைமைப் பதவிகளின் தீர்மானங்கள் மாத்திரமின்றி சங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டு சிறப்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாப்பின் சட்டத்தை மீறி நடைபெற்ற சில கூட்டங்கள் பற்றிய வாத விவாதங்களும் இடம்பெற்றிருந்தது. அத்தோடு யாப்பை மீறியும் செயற்குழு தீர்மானம் அன்றியும் எந்தவொரு பதவிநியமனங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் இடம்பெறுவது உத்தியோகபூர்வமற்றது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments