Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வரணி பிள்ளையாரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்



யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த (09.06.2020) உடைத்து கொள்ளையிட்டவர் எனத் தெரிவிக்கப்படும் சந்தேகநபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் - சங்கானையை சேர்ந்த நபரே மந்துவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் (12) மந்துவிலை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதான நிலையில், அவர் சம்பவத்தில் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையிலேயே ஆலய சிசிடி கமராவில் காணப்பட்ட திருட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆலயத்தில் சங்கிலி, ரூபா 40000 பணம் மற்றும் ஐம்பொன்னாலான கலசம் உட்பட ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments