Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

விசர் பிடித்தவர்கள் உருவாக்கிய பைத்தியக்காரத்தனமான அரசியலமைப்பு! சர்ச்சையை கிளப்பிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ



இலங்கையின் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம் என என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். இது நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம்.

இது விசர்பிடித்தவர்கள் உருவாக்கிய விசர்த்தனமான அரசியலமைப்பு. இதுதான் உண்மையான கதை. இதனை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.

குருணாகல் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று தர வேண்டும்” என்றார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பைத்தியகாரத்தனமான அரசியலமைப்புச் சட்டம் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விமர்சித்தாலும் அவர் உட்பட அவர் சார்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனே இந்த திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உட்பட முழு அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக கூறியே சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments