Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கருணாவை விடவும் நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட நல்லாட்சி படுமோசம் -மகிந்த சீற்றம்



கருணா விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை. ஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர் மறந்து விட்டார்கள். 2002ம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்க வழங்கிய விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மகிந்த ராபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது.

கருணா தெரிவித்த கருத்துக்களை முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.கருணா விவகாரத்தை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தின் சாதனைகளை மறைப்பதற்கு முயல்கின்றனர்.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவேளை முகாமொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான படையினரின் உயிரிழப்பிற்கு காரணமாகயிருந்ததாக தெரிவித்ததை நல்லாட்சியை சேர்ந்தவர்கள் எப்படி பெரும் விடயமாக மாற்றினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.

ஏனைய விடயங்களை முன்னணிக்கு கொண்டுவருவதன் மூலம் பரந்துபட்ட விடயங்களை மறைப்பது எவ்வளவு சுலபமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் நவம்பர் 2005 இல் ஜனாதிபதியான பின்னர் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்தோம் – ஏனென்றால் கருணா அவ்வேளை பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் கைவிட்டு இராணுவபுலனாய்வாளர்களிடம் சரணடைந்திருந்தார் .

கருணா விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து அழிந்துபோகவில்லை அவரே எங்களிற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலை அடையாளம் காட்டினார்.

கருணா தெரிவித்துள்ள விடயங்களிற்காக நல்லாட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்பவர்கள் செய்த விடயங்களை பார்த்தால் பல சுவராசியமான விடயங்கள் வெளிவருகின்றன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி முகாமில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவை பெறுவதற்காக 1989இல் அந்த அமைப்பிற்கு ஆயுதங்களை வழங்கினார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்கு பின்னர் விடுதலைப்புலிகள் எங்கள் ஆயுதங்களால் எங்களை தாக்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2002 இல் நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்ககள் வடக்குகிழக்கை சமாதான உடன்படிக்கை என்ற போர்வையில் முற்றாக பிரபாகரனிற்கு வழங்கினார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பிரிப்பதற்காக புதிய அரசியல் அமைப்பிற்கான நகல்வடிவை உருவாக்கியது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச

2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை சேர்த்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணா கொலைகளை புரிந்த காலம் முதல் அவர் அதனை கைவிட்ட காலத்திலும்,தற்போது வரைக்கும் நாட்டை பிளவுபடுத்துவதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருணா பொதுமக்களை கொல்வதை நிறுத்தியிருக்கலாம்,ஆனால் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments