Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வாழ்வாதார கொடுப்பனவு பெறச் சென்ற மக்களை விரட்டியடித்த உத்தியோகத்தர்கள்!











நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டுஅரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா வாழ்வாதார பணத்தினைபெற சென்ற மக்கள் ஹட்டன் சமுர்தி வங்கியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால் வாழ்வாதார கொடுப்பனவினை பெறசென்ற மக்களுக்கும் சமுர்தி உத்தியோகத்தருக்கும் இடையில் இன்று காலை அமைதியின்மையும் ஏற்பட்டது. வட்டவலை லொனக் புதுகாடு வெலிஒயா மேற்பிரிவு கிழ்பிரிவு அட்லிஸ் தண்டுகலா ஆகிய தோட்ட மக்களை இந்த 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை பெற்றுக்கொள்ள ஹட்டன் சமுர்தி வங்கிக்கு மக்களை வருமாறு கூறி அதற்கான இலக்கங்களும் வழகங்கப்பட்டது.

இந்நிலையிலேயே கொடுப்பனவு மக்களுக்கு வழங்காது விரட்டியடிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாம் மூன்று முறை விண்ணப்பபடிவங்களை மீள்நிரப்பி வழங்கியுள்ளோம். ஆனால் எமக்கு இதுவரையிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை இதுவரை வழங்கமால் நாளை மற்றும் நாளை மறுதினம் வருமாறு எம்மை ஏமாற்றிவருகிறார்கள்.

ஒரு தோட்டபகுதியில் ஒரே குடும்பத்தில் ஐந்து மற்றும் ஆறுபேருக்கு இந்த கொடுப்பணவு வழங்கப்படுகிறது. சமுர்தி உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் வாழ்வாதார கொடுப்பனவு வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. கொழும்பில் இருந்து வந்த நாங்கள் 14நாட்கள் தனிமைப்படுத்தபட்டவர்கள். ஏன் எமக்கு இந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்க முடியாது.

அனைவரையும் வருமாறு கூறுகிறார்கள் இங்கு வந்தபிறகு நாள் ஒன்றுக்கு நூறு பேர்க்கு மாத்திரம் தான் வழங்க முடியும் என கூறுகிறார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறிப்பிடுகின்றனர் .

இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் சமுர்தி வங்கியின் சமுர்தி உத்தியோகத்தர் காளியம்மாவை எமது செய்தியாளர் வினவினார். அதன் போது, நாம் தற்பொழுது இலக்கங்கள் வழங்கியுள்ளோம். வழங்கப்பட்ட இலக்கங்களின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு வழங்கிய பிறகு இரண்டு நாட்கள் கடந்தவுடன் மற்றய நூறு பேருக்கு வழங்குவோம். இந்த விடயம் மக்களுக்கு விளங்குவதில்லையென அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments