இரத்தினபுரி - பெல்மடுல்ல பிரதான வீதியின் திப்பிடிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 03 வயது ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிற்றூர்தியில் பயணித்த 3 வயது ஆண் குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.
சிற்றூர்தியில் பயணித்த குறித்த குழந்தை ஜன்னல் வழியாக தலையை வெளியே இட்டு வந்துள்ள நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments