தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியொன்றில் பணியாற்றிய ஊடகத்துறையைச்சேர்ந்த மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் ஊடகத்துறையினர் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் என ஊடகத்துறையினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த 15 நாட்களாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிழந்தார். அவருக்கு வயது 40. தமிழகத்தில் ஊடகத்துறையில் கொரோனாவுக்கு பலியான முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments