இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த பேச்சின்போது இலங்கையின் அபிவிருத்திக்கும்; அதன் இறைமைக்குமான ஆதரவை பொம்பியோ வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ் கொவிட் 19க்கு எதிராக போராடுவது பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்காவின் தொடரும் உதவிகள்,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
மனிதாபிமான மற்றும் சுகாதார விடயங்களில் இரு நாடுகளிற்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்பு குறித்தும் ஆராய்ந்தனர் என இராஜாங்கதிணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருவரும் பகிரப்பட்ட ஜனநாயக பாரம்பரியம்,மனிதஉரிமைகளிற்கான மதிப்பு போன்ற விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments