Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபய-மஹிந்த கட்சியினரால் மாத்தறையில் மூண்டது வன்முறை!



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விருப்பு வாக்கு போட்டி அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் நடந்த வன்முறை சம்பவங்களில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை தெனியாய பிரதேசத்தில் நேற்று காலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் மீது அதே கட்சியை சேர்ந்த வேறு சிலர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த கொட்டபொல பிரதேச சபையின் உப தலைவர் சஞ்ஜீவ அருக்கொட, பிரதேச சபை உறுப்பினர்கள் மானேல் ஆனந்த, ஜீவன் லங்காதிலக்க ஆகியோர் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் மாவட்ட ரீதியாக ஒரு வேட்பாளருக்கு கிடைக்கும் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதால், ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு இடையில் கடுமையாக போட்டிகள் நிலவி வருகின்றன.

இதேவேளை ஹம்பாந்தோட்டை அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஹக்குருவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மரண சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டிருந்த போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் உப தலைவரும் மற்றுமொரு நபரும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுவதால் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments