Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முழுமையற்ற அறிக்கைகளை திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்!



பதில் பொலிஸ்மா அதிபர் முன்வைத்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பான முழுமையற்ற 40 அறிக்கைகள் சட்டமா அதிபரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தியும் அது சார்ந்த ஏனைய சம்பவங்கள் குறித்தும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் முழுமையற்ற அறிக்கைகளே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவால் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு திருப்பி அனுப்பட்டதாக சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை மையப்படுத்திய பல்வேறு விசாரணைகளின் கோவைகள் வழக்கு தொடர்வதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இதில் 40 கோவைகளில் விசாரணைகள் பூர்த்தியாகி இருக்கவில்லை. எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் மிகவும் பலவீனமாக அந்த விசாரணைக் கோவைகள் இருந்தன.

அதனால் அந்த கோவைகளை மீள திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்காலத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை மையப்படுத்திய எந்த விசாரணையாக இருப்பினும் பூரணப்படுத்தப்படாத கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டால் அவையும் திருப்பி அனுப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments