குடும்பத் தலைவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்துவந்த நிலையில் அவரை வீட்டை விட்டே வெளியே அனுப்பியுள்ளனர் குடும்பத்தினர்.
இதில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டவர் 60 வயது முதியவராவார்.
இந்த சம்பவம் தமிழகம் மதுரை மாநகராட்வி பிரிவிற்கு உட்பட்ட பழங்காநத்தம் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் வீதி ஓரத்தில் படுத்திருந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஏன் இங்கு படுத்திருக்கிறீர்கள் வீட்டில் போய் படுக்க வேண்டி தானே என கேட்டதற்கு சற்று தள்ளி நில்லுங்கள் என்று அவர் சொல்லி எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மூச்சுத்திணறல் சளி இரும்ல் உள்ளது எனவும் இதனால் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதாகவும் தகவல் சொன்னார்.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சி மூலமாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை அம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..
பின் மாநகராட்சி அதிகாரிகள் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்கள் .
இவருக்கு தொற்று உள்ளதா என பரிசோதனையின் பின்னரேயே தெரியவரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments