பொகவந்தலாவ லின்போட் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டப்பகுதியில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது, மரத்தில் இருந்த குளவி கூட்டின் மீது கழுகு வந்து அமர்ந்ததன் காரணமாகவே குளவிக்கூடு கலைந்து தம்மை தாக்கியதாக காயமடைந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளவி தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான மற்றைய நால்வரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments