Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

நீதியின் பிடியில் இருந்து தப்பித்த கருணா!



கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்தக் குற்ற விசாரணை அவசியமென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இவரை யுத்தக் குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்த தெரிவித்துள்ள அவர்,

ஸ்ரீலங்காவில் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, ஸ்ரீலங்கா அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

உண்மையில் கருணா யுத்த குற்றங்களிற்காக பல வருடங்களிற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும்.

கருணாவின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையணியினர் 1990ஆம் ஆண்டு ஜூனில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

இதேவேளை அதே வருடம் ஓகஸ்ட் மாதம் அவரது படையணியினர் 200 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

கருணாவை யுத்த குற்றங்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதே யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளதன் காரணமாக கருணா மீண்டும் நீதியின் பிடியிலிருந்து தப்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments