ஹரின் பொர்னாண்டோவின் தைரியம் என்னைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் மல்கம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததுடன், பலத்த கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மங்கள சமரவீர,
இந்தப் பெரும்பான்மை பாசிஸவாத ஆட்சியை ஆதரிக்கின்ற தீவிரவாத சிந்தனையுடைய பௌத்த மதகுருமாருடன் முறையற்றதொரு கூட்டணியை உருவாக்கியிருப்பதாகத் தோன்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரிவுகளின் பாசாங்குத்தனத்தை சவாலுக்குட்படுத்துவதில் ஹரின் பெர்னாண்டோவின் தைரியம் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
0 Comments