நா்ன் கூறிய கருத்துக்களின் நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருக்கிறேன். அதில் மாற்றமில்லை என முன்னாள் பிரதி அமைச்சரும்,அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை விட தான் பயங்கரமானவன் எனவும், ஒரே தினத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருணா தெரிவித்திருந்த கருத்துக்கள் தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் தன்னுடைய நிலையப்பாட்டை வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த போது இராணுவத்தினரை தான் கொலை செய்தது அனைவரும் அறிந்த விடயம் என்பதால், தற்போது என்னை கைது செய்ய முடியாது.
நான் கூறிய நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருக்கிறேன். அதில் மாற்றமில்லை.
என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கூறினாலும் அந்த கட்சிகளிடமும் கடந்த கால தவறுகள் இருப்பதை நினைவுபடுத்துகிறேன்.
தற்போது நான் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளேன் என்றார்.
0 Comments