Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

விகாரதிபதி கொலை: பொலிஸார் வெளியிட்ட மர்மத் தகவல்



இரத்தினபுரி இந்துறுவ - மஹயிந்துருவ விகாரையிலிருந்த கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்றை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று காலை விகாரைக்கு வந்த ஒருவர் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த விகாரையிலிருந்து இந்த துறவியின் சடலம் மீட்கப்பட்டது.

கயிற்றினால் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

73 வயதுடைய இந்துறுவ - மஹயிந்துருவ விகாரையின் விகாரதிபதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், சடலமானது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments