Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்க: நீதிமன்றம் கொடுத்துள்ள விசேட உத்தரவு



கிளிநொச்சி – கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தால் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கான உத்தரவினை கொடிகாமம் பொலிஸார் நீதிமன்றில் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் முறையிட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments