Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா உறுதி



கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் - கெப்பிட்டிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுக்கே மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் குவைத்தில் இருந்து இலங்கை வந்துள்ளார். குவைத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானமையினால் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் குணமடைந்ததாக ஹோமாகம வைத்தியசாலையில் உறுதி செய்யப்பட்டதன் பின் இந்த பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments