Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

மைத்திரி மறைத்த உண்மைகளை அம்பலப்படுத்துங்கள்: கோட்டாபயவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!



முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மறைக்கப்பட்ட 106 நபர்களதும் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை வெளியிடும்படி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினரான வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மறைக்கப்பட்ட 106 பேரது பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கையை அம்பலப்படுத்தாமல் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளைத் திட்டித்தீர்ப்பதில் எந்தவித பயனும் இல்லை.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்த விசாரணை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் விடயங்கள் குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர்.

அந்த பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்தும் அரச தலைவர் இந்த சந்திப்பில் கடும் அதிருப்தி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக 24 மணிநேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் விதமான வேலைத்திட்டத்தை தன்னிடம் கையளிக்கும் படி அரச தலைவரினால் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய வங்கி ஊழலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்ட 106 பேருடைய பெயர் பட்டியலை உடனடியாக அரச தலைவர் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments